பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் தான் 3 பேர் உயிரிழந்தனர் எனவும் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சென்னையில் ‌ குடிநீரில் கழிவு நீர் கலக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் 3 பேர் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால் அமைச்சர் த.மோ அன்பரசன் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை எனவும் அப்படி கலந்திருந்தால் 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்திருப்பார்கள் எனவும் 20-கும் மேற்பட்டோர் மட்டுமே பாதிப்படைந்துள்ளதால் மக்கள் மீதுதான் தவறு இருக்கிறது என்றும் கூறினார். இதற்கு அப்போதே அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அன்றைய தினம் உள்ள குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பி அதற்கான ஆய்வக ரிப்போர்ட்டை தற்போது x பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதாவது அன்றைய தினம் பரிசோதித்த தண்ணீரில் கோலிஃபார் மற்றும் ஈ கோலி ஆகிய இரு பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் சென்னை பெருநகர குடிநீர் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பு படி அந்த இரு பாக்டீரியாக்களும் தண்ணீரில் இருக்கக் கூடாது. ஆனால் தற்போது அந்த இரு பாக்டீரியாக்களும் குடிதண்ணீரில் இருக்கிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் போது அடிப்படை சோதனைகளை கூட செய்யாமல் அலட்சியமாக குடிநீர் வழங்கியுள்ளனர். இதற்கு அமைச்சர் த.மோ அன்பரசன் என்ன பதில் கூற போகிறார். அவர் தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காக அதிகார திமிரின் உச்சத்தில் பொதுமக்களை குற்றவாளியாக்க முயன்றார். மேலும் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் பரிபோன 3 உயிர்களுக்கு அமைச்சர் என்ன பதில் கூற போகிறார் என்று கேட்டுள்ளார்.