குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிராமணவயல் கிராமத்தில் ஓட்டுநரான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாரிமுத்துவின் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிசை வீட்டில் பற்றி எரிந்து தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் குடிசை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *