குக் வித் கோமாளி பவித்ராவுக்கு திருமணமா?… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலிபிரிட்டி சுற்று நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வந்தனர். அதில் பவித்ரா தன்னுடைய நண்பர் சுதர்சன் கோவிந்த் என்பவரை அழைத்து வந்திருந்தார்.

 

தன்னுடைய குடும்பத்தினர் சென்னைக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் சுதர்சனை அழைத்து வந்ததாக பவித்ரா தெரிவித்திருந்தார் . இந்நிலையில் பவித்ரா-சுதர்சன் இருவரும் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பவித்ராவுக்கு திருமணமா? என அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது இருவரும் இணைந்து நடிக்கும் விளம்பரப் படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது .