‘குக் வித் கோமாளி’ அஸ்வின்-சிவாங்கிக்கு கிடைத்த விருது… வெளியான புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அஸ்வின்-சிவாங்கி இருவருக்கும் Trending pair விருது கிடைத்துள்ளது .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் கோமாளிகளும் சேர்ந்து செய்யும் கலாட்டா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக அஸ்வின், சிவாங்கி இருவரும் செய்யும் க்யூட்டான குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அஸ்வின்- சிவாங்கி இருவருக்கும் Trending pair விருது கிடைத்துள்ளது. இதனை ஷிவாங்கி தனது சமூக வளைத்தப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அஸ்வினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.