குகையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்.. ஒரு வருடம் கழித்து ஏற்பட்ட திருப்பம்.. நீடிக்கும் மர்மம்..!!

சுவிற்சர்லாந்தில் ஒரு வருடத்திற்கு முன்பு கண்டறியப்பட்ட இளைஞரின் சடலம் தொடர்பில் தற்போது ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் என்ற மண்டலத்தில் Bruggerberg என்ற பகுதியில் ஒரு குகை அமைந்துள்ளது. அதன் வழியாக சென்ற நபர் ஒருவர் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் படி காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது Dejen Dups என்ற 24 வயது இளைஞரின் உடல் கிடந்துள்ளது.

இச்சம்பவம் நடந்தது கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆகும். அதன் பின்பு காவல்துறையினர் அந்த இளைஞரின் உடலை மீட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இது தொடர்பில் அதே மண்டலத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மீட்கப்பட்ட அந்த இளைஞரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அதில் அந்த நபரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. எனவே கைது செய்யப்பட்ட இளைஞர், Dejen Dups ஐ தாக்கியதற்கான ஆதாரங்களும் இல்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பின்பே குற்றத்திற்கான முழு பின்னணி தெரியும் என்று கூறியுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைத்ததாகவும்,  தங்களது கோரிக்கையை ஏற்று சுமார் 9 நபர்கள் தகவல் தெரிவித்து உதவியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் தான் அந்த நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.