கீழடியில் 5 வது கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு பழங்கால இரட்டை சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்வில் இரட்டை சுவர்கள் ,வட்ட வடிவிலானபானை உறைகிணறு பெண்களின் அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் நீதியம்மாள் என்பவரது நிலத்தில் கட்டிட சுவர், எலும்பு, அம்மி,குழவி உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த சுவர் இரட்டை சுவரின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று அகழாய்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய தொல்லியல் துறையில் பெங்களூர் அகழாய்வு பிரிவின் சார்பில் கீழடியில் 2015 முதல் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. இது வரை நான்கு கட்ட அகழாய்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது 5 வது கட்ட அகழாய்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.