நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் வாத்தி படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் “கேப்டன் மில்லர்” படத்தில் தனுஷ் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது.

அதன்பின் மீண்டுமாக தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் புது படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்நிலையில் 3-வது முறையாக தெலுங்கு இயக்குனர் டைரக்டில் தனுஷ் நடிக்கவுள்ளார். அதாவது, இப்படத்தை கிஷோர் ரெட்டி இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சொந்தஊரு, டேக் ஓவர், ஸ்ரீகாரம் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.