கிறிஸ்துமஸுக்கு தயவு செஞ்சு வராதீங்க… பங்கு தந்தை வேண்டுகோள்..!!!

கிறிஸ்துமஸ் நள்ளிரவு வழிபாட்டிற்க்கு  பொதுமக்கள் பேஷண்ட்  நகர் தேவாலயத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அன்னை வேளாங்கண்ணி பேஷண்ட் நகர் திருத்தல அதிபரும் பங்கு தந்தை வின்சென்ட் சின்னதுரை தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் பொதுமக்கள் வழக்கமாக பேஷண்ட்  நகர் அன்னை வேளாங்கண்ணி திரு தளத்திலே கிறிஸ்துமஸ் விழாவிற்கு வருவது வழக்கம். தயவு  செய்து அவற்றை தவிர்த்து உங்களது இல்லங்களிலேயே இந்த வழிபாடுகள், இரவு நள்ளிரவு வழிபாடு, தொலைக்காட்சி சேனல்கள் வழியாக, யூ ட்யூப் வழியாக நேரலையாக  ஒளிபரப்பப்படுகின்றன. எனவே உங்கள் இல்லங்களில்  இருந்தவாறு திரு நிகழ்வுகளை பங்கேற்கவும், பிறக்க இருக்கிற குழந்தை இயேசுவின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளவும் உங்களை அன்போடு  கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *