கிருஷ்ணகிரியில் சிறுமியை சாக்லேட் கொடுத்து.. பாலியல் வன்கொடுமை செய்த வடகன்ஸ்..!

ஓசூரில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநில தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியை சேர்ந்த 6 வயது சிறுமி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுனில் வர்மா என்பவர் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் பேரில் போலீசார் வட மாநில தொழிலாளி சுனில் வர்மாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Leave a Reply