ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயநகரின் கஜுலரேகா பகுதியை சேர்ந்த இஸ்ரேல் என்ற 22 வயதுமிக்க நபர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட மைதானத்திற்கு சென்றார். இஸ்ரேல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் மீதமுள்ளவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.