கிடைத்த ரகசிய தகவல் …வீட்டில் பதுக்கிய பொருள் … அதிகாரிகள் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி  வைத்திருந்த நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரமுர் கிராமத்தில் வசித்து வரும் ஜக்குபாய் என்பவருடைய வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது   86 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து  ரேஷன்  அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து குடிமை பொருள் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜக்குபாயை  கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *