கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் பதுக்கிய பொருள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளங்கோவன் என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் இளங்கோவன் தனது வீட்டிற்கு பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் இளங்கோவனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *