கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் ஊரப்பாக்கம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விக்னேஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.