காய்கறிகளின் விலை வரத்து குறைவு காரணமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தக்காளி, பீன்ஸ், கேரட், முருங்கை உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னை, கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் மற்றும் கேரட் ஆகியவை ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

முருங்கை காய் கிலோ 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முருங்கைக்காயின் விலை 40 ரூபாய் வரை விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.