“கிடப்பில் போடப்பட்ட படத்தை மீண்டும் இயக்க முடிவு”… விரைவில் வெளிவரும் விக்டர்…. குஷியில் ரசிகாஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் இயக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெறுவதுடன் வசூல் ரீதியாகவும் சாதனை படைக்கும். இவர் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பு பற்றி வசூலிலும் சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட நிலையில் கடந்த வருடத்தின் இறுதியில் சூட்டிங் முழுமையாக நிறைவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கிடப்பில் போடப்பட்ட மற்றொரு படத்தையும் கௌதம் மேனன் விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதாவது இவர் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் வில்லனாக விக்டர் என்ற கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்த நிலையில் விக்டர் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் விக்டர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க கௌதம் மேனன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த பணிகள் தொடங்காத நிலையில் தற்போது விக்டர் படப்பிடிப்பின் பணிகள் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தகவல் அருண் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.