காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவித்த நிலையில் நாளையும் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.