ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உயிரிழந்தால் அவர்களின் இறுதி சடங்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சார்பாக கலந்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என யாராவது உயிரிழக்க நேரிட்டால் காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இறுதி சடங்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடை உடன் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.