காளான் பண்ணை அமைக்க…. ரூ 1 லட்சம் மானியம்… வட்டார தோட்டக்கலைத்துறை தகவல்…!!!!

தோட்டக்கலைத்துறை சார்பாக காளான் வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டம், அன்னூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, அன்னூர் வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகள், பெண்கள், சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட தோட்டக்கலைத் துறை சார்பாக சிறிய அளவில் காளான் வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கு மானியம் கொடுக்கப்படுகிறது. இந்த காளான் பண்ணை 600 சதுர அடி பரப்பளவில் அமைப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் கொடுக்கப்படுகிறது. குத்தகை நிலம், சொந்த இடம் வைத்திருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் சாகுபடி செய்த காளான்களை புறநகர் பகுதியில் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு நாளைக்கு ரூ 1000 முதல் 3000 வரை வருமானம் கிடைக்கும். காளான் பயிரில் அதிக ஊட்டச் சத்து இருப்பதால் அதனுடைய தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. ஆதலால் பெண்கள் இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு அன்னூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *