கால் துண்டிக்கப்பட்டதால் வலியில் அலறிய தொழிலாளி…. காப்பாற்ற சென்ற மனைவியும் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

மரம் அறுக்கும் இயந்திரம் காலில் பட்டதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கணவாய் ஜெ.ஜெ நகர் பகுதியில் தச்சு தொழிலாளியான வரதராஜன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மா(63) என்ற மனைவி உள்ளார். நேற்று மாலை மரம் அறுக்கும் எந்திரம் மூலம் வரதராஜன் கட்டில் செய்வதற்காக மரத்தை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரம் அறுக்கும் இயந்திரம் வரதராஜனின் காலில் பட்டது. இதனால் கால் துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த வரதராஜனை அவரது மனைவி காப்பாற்ற முயற்சி செய்தார்.

அப்போது முனியம்மாளின் வலது காலிலும் படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் வரதராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவிக்கு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.