கால்பந்து போட்டியை மிஞ்சிய ஒட்டக அழகு போட்டி…. எங்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!!

பிரபல நாட்டில் ஒட்டகங்களுக்கு அழகு போட்டி நடைபெறுகிறது.

கத்தார் நாட்டில் தற்போது உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பார்ப்பதற்காக வளைகுடா நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இந்நிலையில் ஆஷ்-ஷஹானியா பகுதியில் ஜாயென் கிளப் சார்பில் ஒட்டகங்கள் பங்கேற்கக் கூடிய அழகு போட்டி ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து ஜாயென் கிளப் தலைவர் கூறியதாவது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை போல ஒட்டகங்களுக்கான உலகக் கோப்பை போட்டியையும் நாங்கள் நடத்துவோம். இந்த போட்டியில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இருந்து ஒட்டகங்கள் கலந்து கொள்ளும். மேலும் அவை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அதில் ஒட்டகங்களின் உடல் அளவு, தலை, காதுகள் அமைந்த பகுதி கணக்கில் கொள்ளப்படுகிறது. மேலும் மகாதீர் வகை ஒட்டகத்திற்கு காதுகள் கீழே தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

அவை  நேராக நிற்க கூடாது. அவற்றின் வாயும் வளைந்து இருக்க வேண்டும். இந்நிலையில் ஆசெல்  ஒட்டகங்களுக்கு சிறப்பு பண்புகள் உள்ளது. அதன் காதுகள் அமைந்த பகுதி மிக முக்கியம். இந்நிலையில்  எலும்புகள் மிக மென்மையாக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் போட்டிக்கு வரும் அனைத்து ஒட்டகங்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.