கால்பந்து ஜாம்பவான் மரணம்…. மாரடைப்பா இருக்காது…. தற்கொலையா இருக்கும்…. குழப்பத்தை ஏற்படுத்திய மருத்துவர்….!!

கால்பந்து ஜாம்பவான் மரடோனா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என மருத்துவர் ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவிற்கு 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்துள்ள மருத்துவர் டாக்டர் Alfrado என்பவர் அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இவர் 1977 ஆம் ஆண்டு முதல் 2007 வரை மரடோனாவிற்கு மருத்துவராக இருந்தவர். அவர் கூறுகையில், மரடோனாவிற்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு வாழ்க்கையில் விரக்தியடைந்து மருந்துகள் சாப்பிடுவதைத் நிறுத்தியிருப்பார் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் ஏற்கனவே ஒருமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரை அனுமதித்திருந்த மருத்துவமனையில் அவரை சரியாக கவனிக்கவில்லை என்றும் அலட்சியப்படுத்திய தாகவும் கூறியுள்ளார். இதனிடையே மரடனோவின் மரணத்தை தவிர்த்திருக்க வாய்ப்புள்ளதா என்பதை குறித்து தற்போதுள்ள மருத்துவர் Liopolda lique என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.