கால்நடை மருத்துவ படிப்பு…. நாளையே(அக்..3) கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பான BVSc&AHபட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும்.

செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல தரப்பினரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு ஏற்றவாறு தற்போது அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கால்நடை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.