காலை 9 மணி நிலவரப்படி…. 84 தொகுதிகளில் திமுக முன்னிலை…!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

காலை 9 மணி நிலவரப்படி 128 தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்குகளின் அடைப்படையில் திமுக 84 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துள்ளது. திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சங்கர் தொடந்து முன்னிலை வகித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் சீமான் பின்னடைவில் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *