காலை 5.30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர். இதையடுத்து இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தவாறு இரவு 7 மணிக்கு மிகச்சரியாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது.

இந்நிலையில் நாளை மறுநாள் ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நாளை ஐந்தாம் தேதி மதியம் 12 மணிக்குள் ஓட்டுச்சாவடிக்கு சென்றுவிடவேண்டும் என்றும், மறுநாள் காலை 5.30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.