சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ஒரு தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இன்று காலை அவிநாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் பைபாஸ் ரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியின் மீது பயந்து பயங்கரமாக மோதி முன்பக்கம் அப்பளம் போல் நெருங்கியது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 4 பெண்கள் உட்பட 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த பேருந்தில் மொத்தம் 37 பயணிகள் இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.