நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஆனது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. சில மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் பல மாநிலங்களில் பல்வேறு கட்டமாகவும் நடைபெறுகிறது . வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஜூன் 4ஆம் தேதியில் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காலையிலேயே எழுந்து தங்களுடைய ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் .இல்லாவிட்டால் திமுகவினர் நம்முடைய ஓட்டுகளை கள்ள ஓட்டாக போட்டு விடுவார்கள்.  அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது என்று குற்றம் சாட்டியுள்ளார்.