சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னார்பாளையம் பகுதியில் விவசாயியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். என்பதில் கோவிந்தராஜ் செங்கோடம்பாளையம் பகுதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வசந்தா மற்றும் உறவினர் பெண்ணான லாவண்யா ஆகியோருடன் காரில் சென்றுள்ளார். இந்நிலையில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் செங்கோடம்பாளையம் பிரிவு ரோட்டில் சென்றபோது கோவிந்தராஜ் காரை இடது புறமாக திருப்பி உள்ளார்.

அப்போது ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து கார் மீது பயங்கரமாக மோதி இழுத்து சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கோவிந்தராஜ், வசந்தா, லாவண்யா ஆகிய 3 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார். கோவிந்தராஜ் மற்றும் லாவண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.