கார் மாடல்களுக்கு….. அதிரடி தள்ளுபடிகளை அறிவித்த ஹோண்டா கார்ஸ் நிறுவனம்…..!!!!

இந்திய சந்தையில் ஹோண்டா கார் நிறுவனம் தனது மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனம் மே மாதத்திற்கான தள்ளுபடி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த சலுகைகளை அறிவிப்பதன் மூலம் ஹோண்டா கார் விற்பனையை அதிகப்படுத்த முடியும் என அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மே மாதத்திற்கான சலுகையில் கார் மாடல்களுக்கு அதிக பட்சமாக 33 ஆயிரம் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் மே 31, 2022 அல்லது ஸ்டாக் இருக்கும்வரை மட்டும் வழங்கப்படும்.

ஹோண்டா அமேஸ் மாடல்களுக்கு 9 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 5000 லாயல்டி போனஸ் மற்றும் 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும். இந்த காருக்கு எக்சேன்ஜ் சலுகை எதுவும் கிடையாது.

ஹோண்டா சிட்டி நான்காவது தலைமுறை மாடல்களுக்கு 20 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குகின்றது. இதில் 5000 ராயல்டி போனஸ், 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ. 8 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ஹோண்டா WR V மாடலுக்கு ரூ. 26 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இதில் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
ஹோண்டா சிட்டி ஐந்தாம் தலைமுறை மாடலுக்கு ரூ. 30,396 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 5,396 மதிப்பிலான இலவச அக்சஸரீக்கள், ரூ. 5 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஸ் போனஸ், ரூ. 8 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி  உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு ரூ. 33, 158 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி, ரூ. 12, 158  இலவச அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *