கார்-தனியார் கல்லூரி பேருந்து மோதல்…. கோர விபத்தில் பலியான இன்ஜினியர்…. பரபரப்பு சம்பவம்…!!

கார் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் பகுதியில் ராஜேஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப எஞ்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுபஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது மகளை காரில் அழைத்துச் சென்று கோவையில் இருக்கும் கல்லூரியில் இறக்கி விட்டுள்ளனர். பின்னர் நேற்று மீண்டும் தம்பதியினர் சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பாளையம் என்ற இடத்தில் வைத்து கார் மீது சேலம் நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து படுகாயம் அடைந்த சுபஸ்ரீயை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *