கார்-சரக்கு வேன் மோதல்…. துடிதுடித்து இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

கார்-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரியில் விவசாயியான பழனிச்சாமி(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விளக்கேத்தியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பேயாங்காட்டு வலசு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு பழனிச்சாமியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *