கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தால் பேருந்து, ரயில்கள் போன்றவை இயக்கப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு ரயில், பேருந்துகள் போன்றவை இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில ரயில்கள் மட்டும் மீண்டும் இயக்கப்படவில்லை. அதாவது காரைக்கால் – திருச்சி இடையேயான ரயில் சேவை கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் காரைக்கால்- திருச்சி பயணிகள் ரயில் இதுவரை இயக்கப்படவில்லை.
இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அதனால் தினமும் காரைக்கால் -திருச்சி, திருச்சி – காரைக்கால் இடையே பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். இல்லையெனில் அதிகாலை சென்னையில் இருந்து காரைக்கால் வரும் விரைவு ரயில் காலை திருச்சி இடையே அதிகாலை 5.15 மணிக்கு இயக்க வேண்டும். அதேபோல் அதே ரயிலை மதியம் 12:30 மணிக்கு திருச்சி -காரைக்கால் இடையே விரைவு ரயிலை இயக்க வேண்டும். இந்த ரயில் நாகை, திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம், தஞ்சை, பூதலூர், நாகை, வெளிப்பாளையம், பொன்மலை, திருவெறும்பூர் போன்ற ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இந்நிலையில் காரைக்கால் – திருச்சி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்கினால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நாகூர், நாகை ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் திருச்சி ரயில்வே கோட்ட மேலாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.