காரில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக காரில் கடத்தப்பட்ட குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருப்பதிசாரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் காரில் சோதனை செய்தனர்.

அப்போது 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணமும், 26 கிலோ குட்காவும் காரில் இருந்த காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் முகமது, அலி, அமீர் கான், ஷேக் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த பணம் மற்றும் குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *