காயத்தால் ஷர்துல் தாகூர் திடீர் விலகல் …. மாற்றுவீரர் யார்?….!!!!

இந்தியா – இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சர்துல் தாகூருக்கு தொடை எலும்பு பிரச்னை காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த்  இவர்களில் ஒருவர் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேப் போன்று இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிராட் காயமடைந்து டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மார்க் உட் களமிறங்குவார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *