“காமன்வெல்த் விளையாட்டு போட்டி”… தங்கம் வென்ற பிவி சிந்து…. வெளியான அறிவிப்பு….!!!!

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ளது. கடைசிநாளில் பேட்மின்டன், ஹாக்கி , டேபிள் டென்னிஸ் , ஸ்குவாஷ் , டைவிங் போன்ற 5 விளையாட்டுகளில் 12 தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் கனடாவின் மிச்செல் லி விளையாடினர். அப்போது முதல் செட்டில் பிவி சிந்து 21-15 என்றும் 2-வது செட்டில் 21-13 எனும் கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம்வென்றுள்ளார்.