காமன்வெல்த் வாள்வீச்சு போட்டி… தமிழக வீராங்கனைகள் தேர்வு…. வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி தலைவர் தனசேகரன் மற்றும் கன்வீனர் கருணாமூர்த்தி ஆகியோர் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி லண்டனில் ஆகஸ்டு 9-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இருக்கிறது. அதன்பிறகு ஒடிசா மாநிலத்தில் காமன்வெல்த் வாள்வீச்சு போட்டிக்கு அனுப்புவதற்காக வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் சென்னையைச் சேர்ந்த ஜாய்ஸ் அஷிதா, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெபர்லின் மற்றும் ஜெனிஷா ஆகிய 3 பேர் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்வதற்காக செல்கின்றனர். இவர்களுக்கு செல்வகுமார் என்பவர் பயிற்சி கொடுக்கிறார். மேலும் காமன்வெல்த் போட்டிக்கு செல்ல இருக்கும் வீராங்கனைகளை இந்தியா சார்பில் தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தினர் அனுப்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *