காமன்வெல்த் மேடையில் ஒலித்த யுவன் பாடல்….. வைரலாகும் வீடியோ….!!!!

இங்கிலாந்தில் பர்பிகாம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாபிரிக்கா,  ஸ்காட்லாந்து , நியூசிலாந்து, கென்யா, நைஜீரியா உள்ளிட்ட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டினர். இந்திய சார்பில் 106 வீரர்கள் ,104 வீராங்கனைகள் என்று 210 பேர் பதினாறு விளையாட்டில் கலந்து கொண்டனர்.

போட்டியின் முடிவில் இந்தியா பதக்க பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்ளிட்ட 61 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. நேற்று இறுதி நாள் என்பதால் பல கலைநிகழ்ச்சிகளுடன் போட்டி நிறைவு பெற்றது . நிறைவு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் தமிழில் பாலா இயக்கத்தில் யுவன் இசையில் வெளியான அவன் இவன் படத்தில் இடம்பெற்ற ’டியா,டியா டோலே’ என்ற பாடலுக்கு பெண்கள் நடமாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *