கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் ரிஷப் செட்டி. இவர் காந்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். காந்தாரா திரைப்படம் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்த படத்தை கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பேல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் நடிகர் ரிஷப் செட்டிக்கு சிறந்த நம்பிக்கைக்குரிய பிரிவில் 2023-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிசப் செட்டிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதால் அவருக்கு தற்போது பலரது தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.