திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்ற 23 வயது இளைஞர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர்களுடன் கேரளா செல்வதற்காக புறப்பட்டார். அப்போது அவரை சந்திக்க அந்தப் பெண்ணின் உறவினர்கள் அழைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்துல் திருப்பூர் நொய்யல் ஆறு மின் மயானம் அருகே சென்று அவர்களிடம் பேசி உள்ளார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் அப்துலை அறிவாளால் சரமாரியாக வெட்டினர். பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற போதும் பின்னால் துரத்திச் சென்று அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். காதல் விவகாரத்தில் வாலிபரை ஓட ஓட துரத்திச் சென்று ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதில் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.