‘காதல் வலையில் சிக்கிய 100 இளம்பெண்கள்’… நிர்வாண வீடியோவை காட்டி பிளாக்மெயில்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!!

சமூக வலைத்தளங்களில் பழக்கமாகும் பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூரை சேர்ந்த பிரசன்ன குமார் என்பவர் சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாய் உள்ளார். இவர் பி.டெக் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது, தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஷேர் சாட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் இளம் பெண்களிடம் பேசி அவர்களை தன் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார், இதில் மயங்கிய சில பெண்கள் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளனர். அதை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அந்த நபர் சம்பந்தப்பட்ட பெண்களிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

இதுதவிர சில பெண்களிடம் நகைகளையும் அவர் ஏமாற்றி வாங்கியுள்ளார். இப்படி நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த அந்த நபரின் மீது சில பெண்கள் மட்டுமே புகார் கொடுத்தனர். சில பெண்கள் தங்களின் குடும்பத்தை கருதி வெளியில் சொல்லாமல் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளன. இதையடுத்து தலைமறைவாக இருந்த பிரசன்ன குமாரை பிடிப்பதற்கு கடப்பா போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

கடந்தவாரம் ஒரு வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அவரும் அந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் அம்பலமானது. உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பல பெண்களை ஏமாற்றி நிர்வாணமாக வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்து பல லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை பறித்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *