காதல் திருமணம்…. பெண் தலையை துண்டித்த சகோதரன்…. தலையுடன் செல்ஃபி எடுத்த கொடூரம்….!!!!

மகாராஷ்டிராவில் காதல் திருமணம் செய்த சகோதரியின் தலையை துண்டித்து கொலை செய்த 17 வயதுச் சிறுவனும், அவனது தாயும் தலையுடன் செல்பி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவுரங்காபாத்தில் உள்ள லக்கன் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த இளம் பெண் தன்னுடைய கணவருடன் லக்கான் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களது திருமணம் கலப்புத் திருமணம் இல்லை என்றாலும், தன்னுடைய குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை கொலை செய்ய அந்த பெண்ணின் தாயும் சகோதரனும் திட்டமிட்டுள்ளனர்.

சமரசம் ஏற்பட்டதாக நடித்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த இளம் பெண் தனது தாயிற்க்கும், சகோதரனுக்கும் சமையலறையில் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் சென்ற சகோதரன் சகோதரியை அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் தாயும் மகனுமாக சேர்ந்து துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி எடுத்து உள்ளனர். இதனை தொடர்ந்து, சகோதரியின் கணவரை கொலை செய்ய முயற்சி செய்த நிலையில் அவர் தப்பி ஓடிவிட்டார். செல்போனை கைப்பற்றி போலீசார் 17 வயது சிறுவனையும் அவனது தாயையும் கைது செய்தனர். அந்த சிறுவன் மராத்தி திரைப்படம் ஒன்றால் ஈர்க்கப்பட்டு, இப்படி ஒரு கொலையை செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *