காதல் திருமணம் செய்த இளம்பெண்… மர்மமான முறையில் மரணம்… காரணம் வரதட்சணையா..?

பொன்னேரி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கோட்டை குப்பம் கிராமத்தில் வசிப்பவர் 45 வயதான நைனியப்பன். இவரது மகள் சிவரஞ்சனி. இவரும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த 23 வயதான பிரவீன் குமார் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் திருப்பாலைவனம் கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவரது வீட்டில் சிவரஞ்சனி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் சிவரஞ்சனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகார் மனுவில் மருமகன் பிரவீன்குமார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், அதன் காரணமாக சிவரஞ்சனி தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்திருந்தார். மேலும் புகாரின் பேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்தார். இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *