காதலி மஞ்சிமா மோகனை கரம் பிடித்த நடிகர் கௌதம் கார்த்திக்…. வைரலாகும் திருமண புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான இவர் கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுமா மோகனை காதலித்து வந்தார். அண்மையில் இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் கௌதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியான மஞ்சிமா மோகன் இன்று கரம் பிடித்தார்.

சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் நடிகர் சிம்பு, நடிகை அம்பிகா மற்றும் ராதா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.