காதலில் கௌதம் கார்த்திக்…. யாருடன் தெரியுமா….? ஒரே பதிவில் உறுதியான தகவல்….!!

நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம்தமிழ்  திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகாதேவன், ஆனந்தம் விளையாடும் வீடு, வை ராஜா வை , உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் தேவராட்டம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை  கௌதம் கார்த்திக் காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் இதற்கு இதுவரை இருவரும் பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில் மஞ்சிமா மோகன் பிறந்த நாளை யொட்டி அவரது புகைப்படத்தை பகிர்ந்து கௌதம் கார்த்திக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அனைவரும் எதிர்பார்க்கும் விதத்தில் “உன்னைப் போன்ற ஒரு பெண் எனது வாழ்க்கையில் இணைவதை நான் பெருமையாக கருதுகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துக்கள்” என்ற பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இருவரின் காதலையும் உறுதிப்படுத்திய நிலையில்  ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *