உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் மபி சிவசேனா காதலர் தினம் ஒரு பண்டிகையை கிடையாது. அதை கொண்டாட வேண்டாம். காதலர்களுக்கு நாங்கள் சரியான பாடம் புகட்டுவோம் என்று எச்சரிக்கை ‌விடுத்துள்ளது.‌

இந்நிலையில் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியை பாரத் இந்து முன்னணி அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் முயன்றனர். அப்போது போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாரத் இந்து அமைப்பினரை தடுத்து நிறுத்தினார். மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா தளங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.