காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு…. “திருமணம் செய்ய மறுத்த மாணவி”…. காதலன் ஆத்திரமடைந்து தாக்குதல்…!!!!

காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக மாணவி காதலுடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் மாணவியை தாக்கியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் சென்ற ஒரு வருடங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராம் மூலம் விளாங்குறிச்சி சார்ந்த என்ஜினீயர் பாலமுருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் தொலைபேசி வாயிலாகவும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி பாலமுருகனிடம் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திக்கொண்டார்.

இதனால் கோபமடைந்த பாலமுருகன் மாணவி பயிலும் கல்லூரிக்கு சென்று நுழைவாயிலில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாலமுருகன் மாணவியிடம் கூறி இருக்கின்றார். ஆனால் மாணவி மறுத்ததால் கோபம் அடைந்த பாலமுருகன் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கின்றார். இதனால் அந்த மாணவி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *