இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தக்க தணடனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் அருகே தனியார் கல்லூரி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் காதலனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கத்தி முனையில் அந்த பெண்ணை  கூட்டுபாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காஞ்சிபுரம், குண்டுகுளம் பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.