நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கொல்லி மலைக்கு காணும் பொங்கலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் சேலம், திருச்சி, ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். அங்கு அவர்கள் எட்டு கை அம்மன், படகை இல்லம், மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

அதேபோல் அங்குள்ள சீக்குப்பாறை பட்டிக்கு சென்று அங்கிருந்து காட்சி முனையம் மூலமாக அடிவாரத்தில் உள்ள பகுதிகளை கண்டு ரசித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரப்பளீஸ்வரர் கோவில் எதிரே அமைந்துள்ள வனைப்பகுதியில் சுமார் 300 அடி உயரத்தில் வெள்ளியை உருக்கிவிட்டது போல் தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்று சுற்றுலா பயணிகள் அங்கு குளித்து மகிழ்ந்தனர்.