காணாமல் போன நடிகர் ஜெஃப் பிணமாக மீட்பு…. பின்னணி என்ன?…. விசாரணையில் போலீஸ்….!!!!

கடந்த ஜனவரி 27ம் தேதி காணாமல் போன பிரேசில் நாட்டை சேர்ந்த நடிகர் ஒருவர் மரப் பெட்டிக்குள் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். “ஜெஃப்” என அழைக்கப்படுகிற ஜெபர்சன் மச்சாடோ டா கோஸ்டா (44) கடந்த ஜனவரி 27ம் தேதி காணாமல் போனார். இந்த நிலையில் அவர் ரியோ டி ஜெனிரோவிலுள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் 2 மீட்டர் ஆழத்தில் மரப்பெட்டியில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அவரது உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே காவல்துறை தரப்பில் உறுதிசெய்யப்படும்.

Leave a Reply