நாயை பார்த்து பயப்படும் சிலர் இருக்கும் நிலையில், அதை செல்லப் பிராணியாக வளர்க்கும் நபர்களும் இருக்கின்றனர். அதை தன் குழந்தை போல் வீட்டிலுள்ள உறவினர்களில் ஒருவராக பாசமாக வளர்ப்பார்கள். இதற்கிடையில் செல்லப் பிராணியாக வளர்த்து வரும் நாயை காணவில்லை எனில் போஸ்டர்கள் அடிப்பதும் வழக்கமாக போய்விட்டது. அந்த வகையில் தற்போது தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகில் 26/12/2022 அன்று காலை 11 மணி அளவில் டைசன் என்ற நாய் காணாமல் போய்விட்டது என்று போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது.
அந்த நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய்.10,000 வழங்கப்படும். அந்த நாய் உடல் முழுவதும் கருப்பு நிறம், கழுத்தில் நீல நிறம் பெல்ட் அணிந்து இருக்கும். ஆகவே அந்த நாயை கண்டுபிடித்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தொடர்புக்கு 74016 76781 என்ற நம்பருக்கு தொடர்புகொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.