காணாமல் போன சிறுமி….. 100 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின்…. கண்டுபிடித்த தெலுங்கானா போலீஸ்..!!

தெலுங்கானா மாநிலத்தில் காணாமல் போன சிறுமியை 100 நாட்கள் தேடி அலைந்து காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ரெமிடிசார்லா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி டிசம்பர் 17 ஆம் தேதி காணாமல் போனார். அந்த சிறுமி தொலைந்து 100 நாட்கள் தேடுதல் நடத்தி தற்போது தெலுங்கானா காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சூனிய செயல்களில் ஈடுபடும் சூரிய பிரகாஷ் சர்மா என்பவர் தான், மாமா வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது. அச்சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்று அடைத்து வைத்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமி உத்தரபிரதேசத்தில் இருப்பதாக தகவல் கிடைத்து சுமார் 1300 கிலோ மீட்டர் பயணித்து சிறுமியை பத்திரமாக மீட்டு வந்த தெலுங்கானா காவல்துறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.